New law in parliment
இந்தியா
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆதரவு
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த மசோதா நல்லது என்று தான் நம்புவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
