

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், கல்லூரி மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆசிரியர் ரவியை, சக மாணவர்கள் கல்லூரியிலேயே சரமாரியாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவி காட்டிய குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களைப் பார்த்து ஆத்திரமடைந்த மாணவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.