Delhi fire
இந்தியா
4 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 3 பேர் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தலைநகர் டெல்லியில் 4 மாடி கட்டடத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்தின் தரை தளத்தில் இருந்த செருப்பு கடையில் பற்றிய தீ, பின்னர் கட்டடம் முழுவதும் பரவியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
