

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹீமா நினாமா என்ற இளம்பெண்ணின் சமூகப் பணியைப் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் பாராட்டியுள்ளார்.
தனது கிராமத்தில் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக ஹீமா மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன. இளம் வயதிலேயே குழந்தைத் திருமணத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவரது துணிச்சலையும் சமூக அக்கறையையும் பெக்காம் பாராட்டியுள்ளார்.