7
இந்தியா
இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள்.. இறுதி விலைப் பட்டியலை சமர்ப்பித்தது பிரான்ஸ்
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான இறுதி விலை பட்டியலை பிரான்ஸ் சமர்பித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான இறுதி விலை பட்டியலை பிரான்ஸ் சமர்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரான்ஸ் செல்லவிருப்பதை முன்னிட்டு, ரஃபேல் விமானங்களுக்கான இறுதி மற்றும் சிறந்த விலை பட்டியலை இந்திய அதிகாரிகள் வசம் பிரான்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கணிசமான அளவுக்கு விலை குறைக்கப்பட்டு, இறுதி பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

