Boat accident
இந்தியா
பூரி கடலோர பகுதியில் அலை தாக்கி படகு கவிழ்ந்து விபத்து நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி சகோதரர், அவரது மனைவி..!
முன்னாள் கேப்டன் கங்குலியின் சகோதரரும், அவரது மனைவியும் உயிர் தப்பினர். சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி உள்ளிட்டோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் படகு சாகசத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென எழுந்த மிகப்பெரிய அலை தாக்கியதில், நிலைகுலைந்து படகு கவிழ்ந்ததில், அதில் பயணித்த அனைவரும் கடலுக்குள் விழுந்தனர்.
உடனே, அங்கிருந்த லைஃப் கார்டுகள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.