பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி
இந்தியா
இந்திய பங்குசந்தைகளில் கடும் வீழ்ச்சி.. சென்ற வார ஏற்றத்தின் முடிவில் கடும் இழப்பு
கடந்த வாரம் மின்னல் வேகத்தில் ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
கடந்த வாரம் மின்னல் வேகத்தில் ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் வர்த்தகத்தின் துவக்கத்திலேயே ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 84 ஆயிரத்து 633 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டியும் சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து 25 ஆயிரத்து 888 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. பங்குவிலைகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
IT மற்றும் நிதிநிறுவன பங்குகள் தலாடியாக விலை குறைந்ததால் இந்த அளவுக்கு பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

