

உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குறித்து அமித் ஷா தவறாக பேசியதாகவும், அவரது கைகள் நடுக்கத்துடன் காணப்பட்டதாகவும் கூறினார்.அமித் ஷாவுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி,தமது கேள்விகளுக்கு அவர் நேரடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பதை அனைவரும் பார்த்தனர் என்றார்.தமது விளக்கத்திற்கான எந்த ஆதாரத்தையும் அமித் ஷா காட்டவில்லை எனவும், எஸ்ஐஆர் குறித்து தம்முடன் நேரடியாக விவாதிக்க வருமாறு அமித் ஷாவுக்கு சவால் விடுத்த தாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.