E-Way பில் சரக்கு அனுமதியில் மெட்ரோ இரயில் சேர்ப்பு

50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை அனுப்ப புதிய வசதி 5வது போக்குவரத்து வழியாக ஜிஎஸ்டி அமைப்பு அறிவிப்பு
மெட்ரோ இரயில்
மெட்ரோ இரயில்
Published on: 

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை இனி மெட்ரோ ரயில் மூலமாகவும் கொண்டு செல்லலாம் என்ற வகையில், இ-வே பில் எனப்படும் சரக்கு போக்குவரத்து அனுமதி சீட்டு முறையில் மெட்ரோ ரயிலையும் ஜிஎஸ்டி அமைப்பு புதிதாக இணைத்துள்ளது.

இதுவரை சாலை, சாதாரண ரயில், விமானம், கப்பல் ஆகிய 4 வழிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 5வது வழியாக மெட்ரோ ரயில் இணைக்கப்பட்டு, வியாபாரிகள் அதற்கான ஆவண எண்ணை பதிவு செய்து சரக்குகளை அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.