

பயணிகளிடம் கூடுதல் வருவாய் பெறும் இண்டிகோ நிறுவனம்
பயண கட்டணம் அல்லாமல் கூடுதல் வருவாய் ரூ.590 ஆக உயர்வு
கூடுதல் வருவாயை மேலும் அதிகரிக்க திட்டமிடும் விமான நிறுவனம்
இண்டிகோ விமான நிறுவனம் பயணக் கட்டணங்களை தவிர, தலா ஒரு பயணியிடம் இருந்து கிடைக்கும் வருவாய் 525 ரூபாயில் இருந்து 590 ரூபாயாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்லி வால்ஷ் (Willie Walsh) தெரிவித்துள்ளார்.
கூடுதல் சேவைகள், பிரீமியம் சலுகைகள் மற்றும் லாயல்டி திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வருவாயை மேலும் அதிகரிக்க முயன்று வருவதாக அவர் கூறியுள்ளார்.