Rajnath singh
Rajnath singh

"பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா ஆர்வம்"

இதன் மூலம் இந்தியாவின் மதிப்பை உலக நாடுகளின் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
Published on: 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லக்னோவில் கடந்த மாதம் 18ஆம் தேதி ராஜ்நாத் சிங்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்த நிலையில், இந்தோனேசியா ஏலம் வாங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மதிப்பை உலக நாடுகளின் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

newstamil.tv