Kolkatha rape case
இந்தியா
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதான 4 பேருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான 4 பேருக்கும் எதிராக 658 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான 4 பேருக்கும் எதிராக 658 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
தடயவியல் சோதனையின்போது மாணவியின் ஆடையில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியுடன், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியும், ஒப்பந்த ஊழியருமான மோனோஜித் மிஸ்ராவின் டி.என்.ஏ ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டதாகவும், மூவரது செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூவரும் வலுக்கட்டாயமாக மாணவியை காவலாளி அறைக்கு இழுத்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரமும் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
