Telungana
இந்தியா
அரசு கட்டி வரும் டபுள் பெட்ரூம் வீட்டை ஆய்வு செய்த எம்.எல்.ஏ
வீட்டின் தரை தளம் திடீரென இடிந்து பள்ளம் ஏற்பட்டது. அதில்,சிக்கிய எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பத்திரமாக மீக்கப்பட்டனர்.
தெலங்காணா மாநிலத்தில், ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் அரசு கட்டி வரும் வீட்டினை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, திடீரென இடிந்து விழுந்த தரைதளத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிக்கிய வீடியோ வெளியாகியது. வேமுலவாடா பகுதியில் அரசு சார்பில் டபுள் பெட்ரூம் வீடு வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்களுக்காக கட்டப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி எம்.எல்.ஏ. சீனிவாஸ் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் தரை தளம் திடீரென இடிந்து பள்ளம் ஏற்பட்டது. அதில்,சிக்கிய எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பத்திரமாக மீக்கப்பட்டனர்.
