

கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்கள் தயாரிப்பு சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் 3வது பெரிய சந்தையாக உள்ள கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்கள் துறையின் சந்தை மதிப்பு 2029-30 ஆம் நிதியாண்டிற்குள் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.