13
இந்தியா
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. போரில் மூக்குடைந்த பாக். பிரதமரின் பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்மா விமான படைத் தளத்திற்கு சென்ற பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சனையையும் சேர்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே தங்கள் தரப்பில் உள்ளதாகவும் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக ஒரு ராணுவ தளத்திற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் அங்கு ராணுவத்தினருடன் கலந்துரையாடினார்.
அவருடன் துணை பிரதமர். ராணுவ அமைச்சர், ராணுவ தளபதி உள்ளிட்டோர் சென்றனர்.

