நீக்கப்பட்ட 22 லட்சம் வாக்காளர் மனுக்களுக்கு முன்னுரிமை

பெயர் சேர்ப்பு எதிர்ப்பு மேல்முறையீடுகள் ஒத்திவைப்பு கொல்கத்தா வாக்காளர் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு
வாக்காளர் மனு
வாக்காளர் மனு
Published on: 

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 22 லட்சம் வாக்காளர்களின் மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த வழக்கில், பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு எதிரான மேல்முறையீடுகளை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு நீக்கப்பட்ட வாக்காளர்களின் வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.