

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் மலைப்பாம்புகள் வனத்துறையினர் விரைந்து பாம்புகளை பிடிக்க கோரிக்கை
அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மலைப்பாம்புகளின் வீடியோ வெளியானதால், இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சமாக இருப்பதாக கூறியுள்ள மக்கள், வனத்துறையினர் விரைந்து பாம்புகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.