Indian army
இந்தியா
சமூக வலைதளங்களை பயன்படுத்த இராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு
ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதை தடுக்கவே இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது எனவும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதை தடுக்கவே இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
