Uco bank scam
இந்தியா
CSPL- ல் உடன் தொடர்புடைய ரூ.6,210 கோடி வங்கி மோசடி UCO வங்கி முன்னாள் தலைவருக்கு 21 ம் தேதி வரை ED காவல் ..!
6 ஆயிரத்து 210 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் சுபோத் கோயலை 21 ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 ஆயிரத்து 210 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் சுபோத் கோயலை 21 ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய 6 ஆயிரத்து 210 கோடி ரூபாய் வங்கி மோசடியில் யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் மீது கொல்கத்தா CBI பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கியது.
இதில் சுபோத் குமார் கோயலை கடந்த 16 ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத்துறையின் கூற்றுப்படி கடன் நிதியை திருப்பி அனுப்பியது மற்றும் மோசடி க்கு CSPL நிறுவனத்திடமிருந்து கணிசமான சட்டவிரோத லாபங்களைகோயல் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

