ஐந்து பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி

சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் முடிவு
சமாஜ்வாதி
சமாஜ்வாதி
Published on: 

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 5 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த 2-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதேசமயம், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முன்வந்துள்ள 26 தொகுதிகள் தவிர, கூடுதல் தொகுதிகளை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.