Delhi girl safety
இந்தியா
பாலியல் தொந்தரவா அல்லது வன்முறை தாக்குதலா?
பெண்களுக்கான புதிய அவசர உதவி தொலைபேசி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
வன்முறை அல்லது பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கான புதிய அவசர உதவி தொலைபேசி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த 14490 எண்ணில், பாதிப்பை சந்திக்கும் எந்த பெண்ணாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். நாடு முழுவதிலும் இருந்து இலவசமாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொண்டவுடன் முதலில் யாரை சந்திக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்படுவதுடன், தேவையான உதவிகளும், அவசரகால உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேசிய மகளிர் ஆணையத்தின் அவசரகால ஹெல்ப் லைனான 7827270170 என்ற தொலைபேசி எண்ணுடன் புதிய எண்ணும் இணைக்கப்பட்டு, பெண்களுக்கு தடையில்லா உதவி வழங்கப்படும்.
