

ஷேக் ஹசீனா டெல்லியில் வங்கதேச உயர் ஆணையத்திற்கு கடிதம் என தகவல் லண்டன் வழக்கறிஞர் மூலம் நவ.19இல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனக்கு புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை பெற்று தருமாறு, லண்டன் வழக்கறிஞர் மூலமாக டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச உயர் ஆணையத்தின் பொறுப்பு உயர் ஆணையர் பிரீதி ரஹ்ம்க்கு கடந்த 19 அன்று கடிதம் எழுதியுள்ள ஹசீனாவின் வழக்கறிஞர் ஸ்டீவன் பௌல்ஸ் இந்த விஷயத்தில் அவசர அடிப்படையில் பதிலளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.