Sitha ramaiyya
Sitha ramaiyya

மொழிப்பிரச்னை தொடர்பாக பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்

இதுபோன்ற விவகாரங்களை இரு மாநிலங்களும் சேர்ந்து உணர்வுப்பூர்வமான முறையில் கையாள வேண்டும் என்றும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
Published on: 

மொழிப்பிரச்னை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியிருக்கிறார். எல்லை மாவட்டங்களில் உள்ள கன்னட வழிப்பள்ளிகளில் கூட மலையாளத்தை கட்டாய முதல் மொழியாக்க முற்பட்டால் அது குழந்தைகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களை இரு மாநிலங்களும் சேர்ந்து உணர்வுப்பூர்வமான முறையில் கையாள வேண்டும் என்றும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

newstamil.tv