

சத்தீஸ்கரின் சில பகுதிகளில் இரத்த சிவப்பாக மாறிய வானம் விசித்திர தோற்றத்துக்கும் அர்னாப் புயலுக்கும் தொடர்பில்லை
சத்தீஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகளில் வானம் இரத்த சிவப்பாக செந்நிறத்தில் காட்சியளித்ததற்கும், அர்னாப் புயலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது சூரிய ஒளி நீண்ட தூரத்தை கடந்து வருவதால், குறைந்த அலைநீளம் கொண்ட நீலம், பச்சை நிற கதிர்கள் சிதறடிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு போன்ற அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் மட்டும் காட்சியளிக்கும் வழக்கமான நிகழ்வு தான் என்பதும், அரிதான சூழல்களில் இதன் தீவிரம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.