27
இந்தியா
நீட் தேர்வு தோல்வி அச்சத்தில் சேலத்தில் மாணவர் தற்கொலை.. அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது- செல்வப்பெருந்தகை
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், தான் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செவ்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 51 மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு என்பது நீட் தேர்வால், அவர்களுக்கு ஒரு கனவாகவே மாறியுள்ளதாக கூறியுள்ளார்.