இந்திய ரூபாய் தானாகவே மதிப்பை உயர்த்திக் கொள்ளும்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில், இந்திய ரூபாய் தானாகவே தனது மதிப்பை உயர்த்திக் கொள்ளும் என்ற விளக்கத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் நடத்திய தலைமைப்பண்பு குறித்த உச்சி மாநாட்டில் பேசிய அவரிடம், முந்தைய யுபிஏ ஆட்சியில் ரூபாயின் மதிப்பு வீழ்ந்த போது பாஜக கடுமையாக எதிர்த்த தே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்போது பணவீக்கம் அதிகமாகவும், பொருளாதாரம் நலிவுற்றும் இருந்ததால் அப்படி கூறினோம் என பதிலளித்தார்.ரூபாயின் மதிப்பு சரிவதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்ற நிர்மலா சீத்தாராமன், விரிவான பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் அதை பார்க்க வேண்டும் எனவும், அதை குறுகிய கால அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது எனவும் தெரிவித்தார். டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் 90 ரூபாய் 43 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
