நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள்.. அரசமைப்புச் சட்ட ரீதியானவை என்றே கருதப்படும்
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பை மீறாதவை என பொதுவாக கருதுவதாகவும், அந்த சட்டங்களில் பெரிய அளவுக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் மட்டுமே நீதிமன்றங்கள் அதில் தலையிடும் எனவும் தலைமை நீதிபதி BR கவாய் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தாக்கலான மனுக்களை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்த து.
அப்போது தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஆனால் வக்ப் சொத்தை பயன்படுத்துவது யார், வக்ப் கவுன்சில் மற்றும் மாநில வக்ப் போர்டுகளில் முஸ்லீம் அல்லாதவர்களை நியமிப்பது, அரசு சொத்துகளை வக்ப் சொத்துகளாக அறிவித்தல் ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தினால் போதுமானது என மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் விசாரணை முழு அளவில் நடக்கும் எனவும் மசோதாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியுமா என்பது பற்றி ஆராய்வதாகவும் தெரிவித்தனர்.

