ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் விவரங்களை கேட்ட இளைஞர்.. இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டம்

பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி, ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் விவரங்களை கேட்ட கோழிக்கோடு இளைஞரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
10
10
Published on: 

பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி, ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் விவரங்களை கேட்ட கோழிக்கோடு இளைஞரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கேரளாவின் கொச்சியில் உள்ள கப்பற்படை அலுவலகத்தை தொடர்புகொண்டு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்த விவரங்களை கேட்டது தொடர்பாக, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்கிற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தன்மை கொண்ட பல்வேறு சமூக வலைதளக் குழுக்களை முஜீப் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. எனவே, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களோடு தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

newstamil.tv