16
இந்தியா
இந்தியா-பாக். போரை நிறுத்தியதாக கூறும் டிரம்ப்..
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 21 ஆவது முறையாக கூறிய பிறகும் அது குறித்து பிரதமர் மோடி ஏன் இது வரை வாய் திறக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்ப ப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நான்கு நாட்களில் முடிக்கப்பட்ட பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் ஏற்படுத்தப்பட்டது என டிரம்ப் உரிமை கோரினார். வர்த்தக உடன்படிக்கை செய்ய வேண்டுமானால் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என தாம் கெடு விதித்த தாகவும் அவர் கூறி வருகிறார்.
சென்ற வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் 21 ஆவது தடவையாக இவ்வாறு கூறினார். இது குறித்த எக்ஸ் பதிவில் 59 நாட்களில் டிரம்ப் 21 முறையாக இப்படி கூறியது பற்றி மோடி இன்னும் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.