

முக்கிய கோவில்களில் விஐபி தரிசன கட்டண முறையை அகற்ற வேண்டும் என தாக்கலான ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. விஐபி தரிசனம் என்ற பெயரில் கட்டணம் வாங்கிக் கொண்டு பணம் படைத்தோரை கடவுள் சிலைக்கு அருகே தரிசனத்திற்கு அனுமதிப்பதும்.
பொருளாதார வசதி இல்லாத பக்தர்களுக்கு இலவச தரிசனம் என்ற பெயரில் பாகுபாடு காட்டுவதும், அரசியலமைப்பு பிரிவுகள் 14 மற்றும் 21 ஐ மீறியது என்பதால் இந்த நடைமுறைக்கு முடிவு கட்ட கோரி பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
5,000 ரூபாய் வரை வாங்கிக் கொண்டு விஐபி தரிசனம் வழங்குவதால் மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.