DK Siva kumar
DK Siva kumar

டிகே சிவகுமார் முதலமைச்சர் ஆகும் வரை விட மாட்டோம்

கடந்த வாரம் சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு சென்று கார்கேயை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Published on: 

கர்நாடகாவில், டிகே சிவகுமாரை முதலமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மேலும் ஆறு பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 2023 ல் ஆட்சி அமைத்த போது இரண்டரை ஆண்டுகள் சித்தராமய்யா, இரண்டரை ஆண்டுகள் சிவகுமார் என முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது பதவியை விட்டுத் தர சித்தராமய்யா மறுத்து வருவதால், கர்நாடக காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. நிலைமை சிக்கலாகி வருவதால் இப்போது பெங்களூருவில் இருக்கும் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடனடியாக டெல்லி விரைகிறார். வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரைவில் டெல்லி திரும்பிய பின் கர்நாடக சிக்கல் பற்றி இருவரும் விவாதிப்பார்கள் என தெரிகிறது. கடந்த வாரம் சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு சென்று கார்கேயை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv