

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் 557-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக, 2,339 சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றனர். வரும் நவம்பர் 24ஆம் தேதி குருநானக் தேவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் பங்கேற்க இந்தப் பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.