Chief Minister MK Stalin
news
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசுக் கல்லூரிகள்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் உயர்கல்விச் சேர்க்கை அதிகரித்து வருவதாக தெரிவித்து கடந்த 26 ஆம் தேதி 11 மாவட்டங்களில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் கே.வி குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஆயிரத்து 120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
