32
news
மே.வ.அரசு மருத்துவமனைகளில் 7 பேர் உயிரிழப்பு.. மேற்கு வங்க சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்.. 5000 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன
பெண் மருத்துவரின் பாலியல் படுகொலைக்கு நீதி கேட்டு, மேற்கு வங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் காரணமாக, சிகிச்சை கிடைக்காமல், பச்சிளங்குழந்தை உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்ததாக, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பெண் மருத்துவரின் பாலியல் படுகொலைக்கு நீதி கேட்டு, மேற்கு வங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் காரணமாக, சிகிச்சை கிடைக்காமல், பச்சிளங்குழந்தை உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்ததாக, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜூனியர் மருத்துவர்களின் போராட்டத்தால், மாநிலத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட 5000 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் கடந்த 9 ஆம் தேதி துவங்கியதில் இருந்து, புற நோயாளிகள் பிரிவில், சுமார் ஒன்பது லட்சம் பேர், மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்காமல் திரும்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

