

கொ* தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல ரவுடியின் பின்புலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில்...
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் என்கிற உதயகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு, 2 மனைவிகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, சேலம் மத்திய சிறையின் முன்னாள் வார்டன் மாதேஷ் கொ*, ஆள் கடத்தல், வழிப்பறி, நில அபகரிப்பு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர், பொருளாதார குற்றப்பிரிவு தொடர்பான வழக்கு ஒன்றில் சமீபத்தில் முன்ஜாமீன் பெற்று, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல காலையில் கையெழுத்திட்டு விட்டு, நண்பர் பைசலுடன் பைக்கில் சென்றார். சேலம் புதுரோடு மேம்பாலம் அருகே காலை சுமார் 11 மணியளவில் சென்றபோது, டூவீலர்களில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்தது.
சுற்றி வளைத்த கும்பல்
இதைக் கண்ட டேவிட், அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். ஆனால், விடாமல் துரத்திச்சென்ற கும்பல் டேவிட்டை சரமாரியாக வெட்டிக் கொ* செய்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக தப்பிச் சென்றது. கும்பல் தப்பிச் சென்றதை மேம்பாலத்தில் நின்ற ஒருவர் வீடியோ எடுக்க, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்து சென்ற சூரமங்கலம் போலீஸார், டேவிட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொ* செய்து விட்டு தப்பிச் சென்ற கும்பலை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர். அதோடு, கொ*க்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொ* செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.