40
40

டிராகன் படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினி.. இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டு

டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவை, தமது வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
Published on: 

டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவை, தமது வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வந்த் மாரிமுத்து, தமது கனவு நிறைவேறிய நாள் இன்று என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களாக நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன், தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv