3
news
துணை நிலை ஆளுநரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி.. படப்பிடிப்புக்கு நடுவே துணை நிலை ஆளுநரை சந்தித்தார்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில், பிக்பாஸ் ஷோ நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி காரில் அமர்ந்து பின்னர் இறங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதை அறிந்த துணை நிலை ஆளுநர், அவரை ஆளுநர் மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று படப்பிடிப்பின் நடுவே விஜய் சேதுபதி துணைநிலை ஆளுநரை சந்தித்தார்.

