Amarnath Yatra
news
அமர்நாத் யாத்திரை: இதுவரை 3.40 லட்சம் பக்தர்கள் தரிசனம்... குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்க தரிசனம்
ஜம்மு காஷ்மீர் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
இந்த சூழலில், ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 2 ஆயிரத்து 704 ஆண்கள், 675 பெண்கள், 12 குழந்தைகள் மற்றும் 109 சாதுக்கள் என 3 ஆயிரத்து 500 பக்தர்கள் கொண்ட 22-வது குழு பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றது.
மேலும், 95 வாகனங்களில் 2 ஆயிரத்து 668 பக்தர்கள் பஹல்காம் பாதை வழியாகவும், 45 வாகனங்களில் 832 பக்தர்கள் பால்டர் பாதை வழியாகவும் சென்றனர்.
ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து மட்டும் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க சென்று உள்ளனர்.
கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை, ஆகஸ்டு 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
