cm
news
அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பொங்கல் பரிசு
ரூ.183.86 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ‘சி’, மற்றும் ‘டி’ பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
