vijay case
vijay case

கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கும் - உச்சநீதிமன்றம்

கரூரில், விஜய் பங்கேற்ற கூட்டத்தின் நெரிசலில், 41 பேர் பலியான வழக்கு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on: 

கரூரில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தின் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து, தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்த குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம், அரசியல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​க​ கோரி, வில்​லிவாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக, விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்​தரவை எதிர்த்து தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு ​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv