train
news
முன்பதிவு செய்த பின் பயண தேதியை மாற்றும் வசதி
ரயில்களில் முன்பதிவு செய்த பின்னர், பயண தேதியை மாற்றும் வசதி, அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்த பின்னர், பயண தேதியை மாற்றும் வசதி, வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது. திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்தால் மாற்ற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது முன்பதிவு தேதியை மாற்றும் வசதி வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
