தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கோரி அகோரம் தாக்கல் செய்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தற்போது வரை தலைமறைவாக இருப்பதாகவும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வாதத்தை ஏற்ற நீதிபதி மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

00 Comments

Leave a comment