சென்னை

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரும் ரவீந்திரநாத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | divorce from his wife

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து, மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவி ஆனந்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி ரவீந்திரநாத், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு என்ற காரணத்தை கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

00 Comments

Leave a comment