

சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் பணி ஆணை வழங்கினார்.
தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாளை அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை காலை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகம், கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவும், திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் பெறவும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நந்தனத்தில் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.