தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகையும் அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். கிருத்திகையையொட்டி முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மாடவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடிகை ரோஜா, அமைச்சர் பெத்த ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி ஆகிய இருவரும் அதிகாலை நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. கோவிலை சுற்றி வந்த ரோஜாவை பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

00 Comments

Leave a comment