கட்டுப்பாட்டை இழந்த கார் : அண்ணா நகரை சேர்ந்த சந்திரன் தனது குடும்பத்தினருடன் காரில் உஸ்மான் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அன்பழகன் மேம்பாலம் பகுதியில் மேம்பாலத்தின் மேல் செல்லலாமா அல்லது கீழே செல்லலாமா என்ற குழப்பத்தில் அவர் காரை மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு வாகனம் அவரது காரை மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் சுவரில் மோதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சந்திரனின் உறவினருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.விபத்து காரணமாக உஸ்மான் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அன்பழகன் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களை தற்காலிகமாக மாற்றி, பாண்டி பஜார் சாலை வழியாக திருப்பி அனுப்பினர்.இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link பரோட்டா கடனாக கேட்டு போதை ஆசாமிகள் அட்ராசிட்டி