Also Watch
Read this
By: Manigandan Raja

கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு :
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், வயது 40 இவரது மனைவி பிரேமலதா வயது 36. மகன் இன்பச் செல்வன் வயது 7. இவர்கள் குடும்பத்தோடு இருசக்கர வாகனத்தில் மணலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் வரும்பொழுது.
மாதவரம் புறநகர் பேருந்து நிலைய வெளியேறு வாயிலில் பேருந்து திரும்பும்போது, நிலைத்திடுமாறு கீழே விழுந்தனர். இதில் அவர்கள் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக சிறுவனும் உயிரிழந்தான்.
மூவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து சம்பந்தமாக கண்டெய்னர் லாரி ஓட்டுனர் காஞ்சிபுரத்தை சேர்ந்த அன்பரசு வயது 44 என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளும் உள்ளே வரும் பேருந்துகளும் ஒரு வரைமுறை இன்றி வேகமாக வருவதாலும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாலும் மாதவரம் ரவுண்டானா அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதை ஆகிறது.
மேலும் அங்கு சிக்னல் சரியாக இயங்காததால் காலை மாலை என எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வேலைக்கு செல்வோரும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு செல்லும் அவசர ஆம்புலன்ஸ் கள் இந்த போக்குவரத்து நெரிசல் சிக்கித் தைப்பது தொடர் கதையாகிறது.
இதற்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் சிஎம்டிஏ நிர்வாகமும் போக்குவரத்து போலீசரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved