Also Watch
Read this
By: Manigandan Raja

கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள் :
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் குறிப்பாக கார்த்திகை தீபத்திற்கு அடுத்தபடியாக சித்ரா பௌர்ணமிக்கு அதிக அளவில்
பக்தர்கள் வருவார்கள் இன்று இரவு 9:51 மணிக்கு சித்ரா பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் வர தொடங்கினர்.
சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் கடல் அலைகள் போல் நிறைந்து காணப்பட்டது.