Also Watch
Read this
By: Manigandan Raja

திரிணாமுல் காங்கிஸின் புதிய தலைவராகிறார் அரூப் ராய்?
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை நீக்க அதிருப்தி எம்எல்க்கள் குழு முடிவு செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு சுமார் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மமதா பானர்ஜிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், அரூப் ராயை தலைவராக நியமித்து அதிருப்தி குழு முடிவு செய்துள்ளது.
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தில் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தப்பிப்பதற்காக மாணவர்கள் சிலர் அங்கிருந்து கீழே குதித்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங் :
லக்னோவில் தீ விபத்துக்குள்ளான போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணிகள் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தீ விபத்துக்குள்ளான கட்டடத்திற்கு போலீசார் சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.