Also Watch
Read this
By: Web Team

தருமபுரி அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய வழக்கில் இளைஞருக்கு இரண்டு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த காட்டம்பட்டியில் கடந்த 2023 ஜூலை 18-ஆம் தேதி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவனை அதே பகுதியை சார்ந்த பிரகாஷ் என்பவர் பயனில்லாமல் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். நடந்ததை சிறுவன் வெளியே சொல்லிடுவான் என்ற அச்சத்தில் சிறுவனை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசி உள்ளான்.
இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால், குற்றவாளியான பிரகாசிற்கு, மரண தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின் பானு உத்தரவிட்டார். மேலும் இந்த அபராதத்தை கட்ட தவறினால் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில் 201 ஐபிசி வழக்கு மற்றும் 363 ஐபிசி பிரிவுகளுக்கும் என தல ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.